பின் எப்படி பார்ப்பதாம்?
11:19 PM | Author: நிம்முவாகிய நான்


மஞ்சள் தேவதை




உன்னை முதன் முதலில்
அந்த மாம்பழ நிற
பட்டுப்பாவாடையில் பார்த்ததும்
எனக்குத்தோன்றியது
தேவதைகள் வெள்ளை
உடைகளில் தான்
வரவேண்டுமா என்ன ?






எப்படி இப்படி







கோவிலுக்கெல்லாம்
இப்படி வராதே
பார்
வருபவர்களெல்லாம்
உன்னைப்
பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்கிறார்கள்




அம்மன்



முதலில் இப்படி
பார்ப்பதை விடு
என்கிறாய்
கர்ப்பகிரகத்துக்குள்
இருக்கும் என்
தெய்வத்தை
பின் எப்படி
பார்ப்பதாம் ?




பாவம் அம்மா




இப்பொழுதெல்லாம்
கோவிலுக்கு
தவறாமல் வருகிறேன்
எனக்கு பக்தி
வந்து விட்டதென
என் அம்மா மிகுந்த
ஆனந்தப்படுகிறார்கள்
பாவம் அவர்களுக்கு
தெரியாது
என் பக்தி
கர்பகிரகத்துக்குள்ளிருக்கும்
அம்மனுக்காக அல்ல
அதைச் சுற்றிக்
கொண்டிருக்கும்
அம்மனுக்காக
என!




அப்படி பார்க்காதே




அப்படிப் பார்க்காதே
எனக்கு வெட்கமாக
இருக்கிறதென
முகத்தினை திருப்பிக்
கொள்கிறாய்
இருப்பினும்
என்னை நோக்கி
சிரிக்கிறது
எனக்கான உன்
உன் வெட்கம் !









அன்று
என் எதிர் வீட்டு
குழந்தையை நீ
கொஞ்சிக்கொண்டிருந்த
போதுதான்
தவழ ஆரம்பித்தது
உன்னை நோக்கி என்
மனது !








நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில் !


|
This entry was posted on 11:19 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: